வற் வரி அதிகரிப்பின் எதிரொலி: காற்று வாயுவின் விலையும் அதிகரிப்பு

 வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று திங்கட்கிழமை (01.01.2024) முதல் செயர்க்கை காற்றின் விலையும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெறுமதி சேர் வரி(வற் வரி) 18 சதவீதமாக இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பொருட்களின் விலைகள், சேவை கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய, இரு சக்கர வாகனங்களுக்கான காற்று நிறப்பலுக்கு 50 ரூபாவினை நுகர்வோரிடம் சில வர்த்தக உரிமையாளர்கள் இன்றய தினம் வற் வரியினை காரணம் காட்டி பெற்றுக்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை   ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை தற்போது எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமெனவும் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

அதேசமயம், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையும்,லாஃப் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments