கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் புதிய மேலங்கி அறிமுகம், அதிதிகள் கெளரவிப்பு, மிகத்தேவையுடைய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கலுடன் வருடாந்த ஒன்றுகூடலும் என முப்பெரும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மீராவோடை அந்நூர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் ஏ.எல்.சதாம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கழகத்தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பேராசிரியரும் தென்கிழக்கு பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் Dr.MCA.நாஸர்
கலந்து சிறப்பித்தார்.
விஷேட அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களும் சிறப்பதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி உதவிப்பிரதேச செயலாளர் எம்.எம். அல் அமீன் (SLAS) ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் AJ.மர்சூக் (SLEAS), கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளரும் கழகத்தின் ஆலோசகருமான எஸ்.ஏ.எம்.றியாஸ், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியும் கழகத்தின் உப தலைவருமான எம்.ஐ.ஏ.றமீஸ், ஏ.எம்.மன்சூர் (FFSL), புதிதாக நியமனம பெற்ற அதிபர்களான எஸ்.எச்.எம்.சதாத், எம்.பி.ஜெமீல், ஆசிரியர் எம்.எச்.எம்.ஹனீபா, கழகத்தின் பொருளாளர் ஏ.எம்.ஷிபான், வெலிகந்த பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம்.றிஸ்வி, கோறளைப்பற்று மேற்கு, மத்தி விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.இன்ஷாத் முஹம்மது அலி, பாரி ஜும்ஆப் பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.எம்.முஹம்மட் மெளலவி ஆகியோர் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.

0 Comments