வீட்டின் அறைக்குள் இளம் தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு

 இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்திலுள்ள வீடொன்றில் தாய் மற்றும் அவரது மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தனது மகனைக் கொலை செய்துவிட்டு, உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

21 வயதான ஒரு பிள்ளையின் தாயும் 02 வயதுடைய குழந்தை ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை

பொலிஸார் நடத்திய விசாரணையில் கணவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீட்டின் அறைக்குள் இளம் தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு | Mother And Son Death Body Found In Ratnapura

மரணம் குறித்து நீதவான் விசாரணை நடத்தியுள்ளார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Post a Comment

0 Comments