பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் இன்று (29.12.2023) திறக்கப்படவுள்ளதால், மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்படும்.
வெலிகந்த, திம்புலாகலை மற்றும் மட்டக்களப்புக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கதுருவெல புகையிரத நிலையத்தில் இருந்து மனம்பிட்டி வரை விசேட புகையிரத சேவை காலை 10.30 மணி முதல் இடம்பெறவுள்ளதாக கதுருவெல புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.
மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹி அத்த கண்டிய வீதி ஊடாக பயணிக்க முடியும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .

0 Comments